Main Menu

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் எலுமிச்சை சாதம் செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்

உங்க வீட்டில் தினமும் குழம்பா? அப்போ இந்த மாறி ஈசியா சுவையா எலுமிச்சை சாதம் செஞ்சு பாருங்க!!!

 உடலுக்கும் நல்லது உங்களுக்கும் எளிமையானது! குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க!!!

 நீங்கள் சுற்றுலா பயணம் போறிங்களா? அப்போ இதை செஞ்சு கொண்டு போங்கோ வெளிய வேற எதுவும் வாங்க மாட்டீங்க!!!.....




                      தேவையான பொருள்கள் 

1. எலுமிச்சை பழம் 2 
2. கடுகு சிறிதளவு 
3. கடலைப்பருப்பு சிறிதளவு 
4. நிலக்கடலை சிறிதளவு 
5. முந்திரி சிறிதளவு 
6. உளுந்தம்பருப்பு சிறிதளவு 
7. சீரகம் சிறிதளவு 
8. காய்ந்த மிளகாய் தேவையான அளவு 
9. நல்லெண்ணெய் தேவையான அளவு 
10. கருவேப்பிலை சிறிதளவு 
11. மஞ்சள் தூள் சிறிதளவு 
12. உப்பு தேவையான அளவு 
13. வேகவைத்த சாதம் தேவையான அளவு 

                                         செய்முறை 


1. முதலில் எலுமிச்சை சாற்றை தனியாக கொட்டை இல்லாமல் எடுத்து வைத்து கொள்ளவும். 

2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடலைப்பருப்பு, நிலக்கடலை, முந்திரி, உளுந்தம்பருப்பு,  சீரகம் சிறிதளவு எல்லாம் உங்களுக்கு தகுந்தவாறு எண்ணையில் போட்டு கொள்ளவும். 

3. இவையெல்லாம் பொன்னிறமாக வந்தபிறகு கடுகு சிறிதளவு சேர்த்து கொள்ளவும் அது பொரிந்தபிறகு  காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளவும். 

4. பின்பு கருவேப்பில்லை சேர்த்து கொள்ளவும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும். 


5. பின்பு அடுப்பை அணைத்து விட்டு எடுத்துவைத்த எலுமிச்சை சாற்றை ஊற்றி கொள்ளவும். 

6. எண்ணெய் தனியாக பிரிந்துவரும் நேரத்தில் உங்களுக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து கிண்டவும். 

7. அதில் வேகவைத்த சாதம் கலந்து நன்கு கிளறவும். 



இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சுவையான எளிமையான சூடான எலுமிச்சை சாதம் தயார் !!!


Post a Comment

0 Comments