Main Menu

இஸ்லாத்தின் பெயரால் அறிவியல் புரளிகளை பரப்பாதீர் | Do not spread scientific hoaxes in the name of Islam

இஸ்லாம் என்பது மறுமை  வெற்றிக்கான வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கியதாகும்.

கணிதம்

புவியல்

வரலாறு 

அரசியல்

அறிவியல்

போன்றவைகளையும் இஸ்லாம் மேலோட்டமாக  பேசுகிறது 

ஆனால் அவைகளை அறிந்திருந்தால் மட்டுமே  மறுமையில் வெற்றி கிடைக்கும் என்றளவுக்கு இஸ்லாம் இவைகளுக்கு  முக்கியத்துவம் வழங்வில்லை 

காரணம் இவைகளை மனிதன் தனது அறிவின் மூலமே கண்டறிய முடியும் 
இவைகளை கற்று தருவதற்கு இறைத்தூதர்களின் வழிகாட்டல்கள் தேவையும் இல்லை
அதற்காக இறைவன் தூதர்களை அனுப்பவுமில்லை 

சமீபகாலமாக இஸ்லாத்திற்கு பெருமை சேர்க்கிறோம் எனும் பெயரில் அறிவியலுடன் இஸ்லாத்தை தொடர்பு படுத்தி பல கதைகள் ஆதாரமற்ற தகவல்கள் குறிப்பாக நாசா எனும் அமெரிக்கா அறிலியல் கழகத்தின் பெயரை பயன்படுத்தி  பரப்படுகின்ற புருடா செய்திகளை ஏராளம் காண முடிகின்றது 

நோன்பை பார்த்து அதிர்ந்தது அறிவியல் 
மருத்துவர்களே மூக்கில் விரல் வைத்து இஸ்லாத்தை பார்க்கின்றனர்
என்பன போன்ற புருடாக்கள் ஏராளம் 

லைலதுல் கத்ரு இரவில் வானில் ஏற்படும் மாற்றத்தை நாசாவே கண்டறிந்து  நிரூபித்து விட்டது என்ற உலகமகா உருட்டை எவ்வித சிந்தனையும் இன்றி சமூகவலைதளத்தில்  பரப்பிக்கொண்டுள்ளனர் 

அது போன்ற பதிவுகளில் 
சுபுஹானல்லாஹ்
அல்லாஹு அக்பர்
என்று வழக்கம் போல் முஸ்லிம்களும் பின்னூட்டம் பதிக்க துவங்கி விட்டனர்

இத்தகைய பதிவுகளை ஞானமுடையோர்களும் அறிவியல் சான்றோர்களும் படித்தால் அவர்கள் நிச்சயம்  முஸ்லிம்களை ஏளனமாகத்தான் பார்ப்பார்கள் 

விட்டாலாச்சியார் கதைகளை விட அற்புதமான புருடாக்களை எழுதுவோர் முஸ்லிம்களிலும் உண்டு என்று கேலி செய்வார்கள் 

குறிப்பாக இஸ்லாமிய பேச்சாளர்கள் இமாம்கள் உண்மையை பேசக்கூடிய சபைகளிலும் ஜும்மா மேடைகளிலும் இது போல் கதைகளை நம்பி இஸ்லாத்துடன்  தொடர்பு படுத்தி பிரச்சாரம் செய்வதை தவிர்த்து விடுங்கள்

இஸ்லாத்தை ஆய்வு செய்ய வேண்டிய பக்கங்கள் ஆயிரமாயிரம் உண்டு 
இஸ்லாத்தை ஏளனம் செய்ய உதவும் மூடத்தனமான  பதிவுகளை நம்பி மறுமையில் குற்றவாளிகளாக மாறி விடாதீர்கள் 

------------------------------------------------
وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌  اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا‏
எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்
நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும் பார்வையும் இருதயமும் ( அதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்
(அல்குர்ஆன் : 17:36)
-----------------------------------------------

Post a Comment

0 Comments