சுவையான பூண்டு சாதம் செய்வது எப்படி.?
தேவையான பொருட்கள்
- வர மிளகாய் – 2
- பூண்டு – 30
- தக்காளி – 2
- வெங்காயம் – 2
- குடை மிளகாய் – 1 (சிறியது)
- கருவேப்பிலை – 2 கைப்புடி
- கொத்தமல்லி – சிறிதளவு
- எண்ணெய் – 4 ஸ்பூன்
- கடுகு – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இதில் கடலை பருப்பு, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுக்கவும். பிறகு மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்துகொள்ளவும். கடைசில்20 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும். அதேபாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டுப் பற்களையும் போட்டு சிவக்க வதக்கி எடுத்து தனியாக வைக்கவும். அதே எண்ணெயில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரமித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு அதில் சாதம் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி விடவும். பிறகு வதக்கி வைத்துள்ள பூண்டையும் சேர்த்து கலந்து விடவும். இப்பொழுது சுவையான பூண்டு சாதம் தயார்.
0 Comments