ஒரு முறை மட்டன் மிளகு கறி இப்படி செய்து பாருங்க… வாசனையும், சுவையும் தெருவையே தூக்கும்!மட்டனை வைத்து ஏதாவது புது ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க … அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க. வீட்டில் உள்ளவங்க அசந்து போய்டுவாங்க.
தேவையான பொருட்டுகள்
மட்டன் -1 கிலோ
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6
இஞ்சி – சிறிதளவு
புதினா,மல்லி – சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
கறி மசால் தூள் - 1 டீஸ்பூன்
சீரக தூள் - 2 டீ ஸ்பூன்
மிளகு தூள் - 4 டீ ஸ்பூன்
நல்லெண்னை -70 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
பின்பு நல்லெண்னை 70 மில்லிஊற்றவும்.
எண்ணெய் சூடானவுடன் புதினா மற்றும் மல்லி போட வேண்டும்
1 கிலோ மட்டன் போட்டு வதக்கவும்.
சின்ன வெங்காயம்,பூண்டு , சிறிதளவு இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
மிக்சியில் அரைத்து வைத்த போட்டு நன்றாக கிளறி விடவும்.
இதனுடன் மிளகாய் தூள் ,மல்லி தூள், கறி மசால் தூள் சேர்த்து10 நிமிடம் நன்றாக வதக்கவும்.
10 நிமிடம் வதங்கிய பின்னர் சீரக தூள், மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
பின்பு நன்றாக வேக விடவும்
சிறிதளவு புதினா மற்றும் மல்லியை பொடியாக நறுக்கி போட்டு இறக்கவும்.
0 Comments