முதலில் மைதா மாவு , ஏலக்காய் தூள், அரிசி மாவு,உப்பு,பேக்கிங் சோடா, அனைத்துபொருட்களையும் பாத்திரத்தில் சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
பின்பு ஒரு சிறிய பாத்திரத்தில் , வெல்லத்தை ½ கப் தண்ணீருடன் சேர்த்து சூடாக்கவும். வெல்லம் முழுவதுமாக கரைக்கவும். பின்பு மாவுவில் வெல்லம் பாகு சேர்க்கவும்.
பின்பு வாழைப்பழத்தைஅதில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அனைத்தையும் கெட்டியாக பிசையவும்.
பின்பு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி பொரிக்கவும். எண்ணெய் சூடானதும், தீயை குறைக்கவும் . மாவின் ஒரு சிறிய பகுதியை எடுத்து, ஒரு உருண்டையாக உருட்டி , சூடான எண்ணெயில் போட்டு, நன்றாக பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும் , இப்பொது சுவையான போண்டா ரெடி
0 Comments