Main Menu

உடல் பலம் பெற சுவையோடு சத்தும் ,மூட்டு வலிக்கு முடிவுக்கட்டும் ஆட்டுக்கால் சூப்

உடல் பலம் பெற சுவையோடு சத்தும் ,மூட்டு வலிக்கு முடிவுக்கட்டும் ஆட்டுக்கால் சூப் 
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் ஆட்டுக்கால் சூப் பார்க்கலாம்.

  1. தேவையான பொருட்கள்

  • ஆட்டு கால் - 4 
  •  சின்ன வெங்காயம்  - 15
  • தக்காளி - 1 சிறியது
  • பூண்டு  -10 உரித்தது
  • கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்புடி 
  • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் 
  • சீரகம் - 1/2 டீஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
  • மிளகு தூள் - தேவையான அளவு 
  • உப்பு -தேவையான அளவு


  1. செய்முறை 

  • முதலில் ஆட்டுக்காலை நன்கு கழுவி வைக்கவும். 
  • இப்பொழுது ஒரு மிஸ்சியில்மிளகு ,  தனியா,  சீரகம்,  சோம்பு,  ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு,  ஒரு துண்டு இஞ்சி, மற்றும் 14 பல் பூண்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கழுவி வைத்திருக்கும் ஆட்டுக் கால்களை போடவும்.
  • அதனுடன் முக்கால் ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சுமார் 10 லிருந்து 12 விசில் வரும் வரை அதை வேக விடவும்.
  • 12 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அடுப்பிலேயே சிறிது நேரம் வைக்கவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து 
  • எண்ணெய் சுட்டதும் அதில் சிறிதளவு புதினா மற்றும் சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
  • பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு  வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து சிறிதளவு அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • மசாலா கொதிக்க ஆரம்பித்ததும் அதை குக்கரில் இருக்கும் ஆட்டுக்கால் உடன் ஊற்றி நன்கு கலந்து சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை அதை கொதிக்க வைக்கவும்.
  • பின்பு சிறிதளவு கொத்தமல்லியை அதில் தூவி ஒரு கிளறு கிளறி  விட்டு ஒரு கிண்ணத்தில் ஊற்றி பரிமாறவும்.

  1. இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்புக்கு மிகவும் சத்தான ஆட்டுக்கால் சூப் தயார்.

Post a Comment

0 Comments