Main Menu

ஹோட்டல் சுவையில் மொறு மொறு காலிஃபிளவர் சில்லி👌

ஹோட்டல் சுவையில் மொறு மொறு காலிஃபிளவர் சில்லி👌

தேவையான பொருட்கள்

  • காலிபிளவர்-1 (முழுவதுமாக) 
  •  கடலை மாவு-2 டீ ஸ்பூன்
  •  அரிசி மாவு-2 டீ ஸ்பூன்
  •  கான்ஃப்ளார் மாவு- 1 டீ ஸ்பூன் 
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் -தேவையான  அளவு 
  • மிளகாய்த்தூள்-தேவையான  அளவு 
  •  மஞ்சள் தூள்-சிறிதளவு 
  • உப்பு-தேவையான  அளவு 
  •  எலுமிச்சம்பழம்-1/2
  • எண்ணெய்-பொரிப்பதற்கான  அளவு

செய்முறை 

முதலில் ஒரு  காலிஃபிளவரை வாங்கி சிறுசிறு துண்டுகளாக  நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். அதன் பின்பு இரண்டு முறை தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளுங்கள்.பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்து வந்தவுடன் நம் வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளை அதனுடன் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ▢ பின்பு தண்ணீரை வடிகட்டி காலிஃபிளவர் துண்டுகளை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு. பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் அளவு மிளகாய் தூள், ,1/2 டீஸ்பூன் உப்பு ஒன்றரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ▢ ஒரு சிட்டிகை கலர் பொடி, அரை டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் கடைசியாக ஒரு கப் அளவு கான்ஃபளார் மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் 30 நிமிடங்கள் காலிஃபிளவரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்.  சிறிது சிறிதாக காலிஃப்ளவரை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் கடைசியாக இரண்டு கொத்து கருவேப்பிலையே எண்ணெயில் போட்டு எடுத்து அதையும் காலிபிளவர் சில்லி மீது தூவி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான காலிஃப்ளவர் சில்லி தயாராகிவிட்டது

.

Post a Comment

0 Comments