வாயில் கரைந்தோடும் சுவையில் ஃபுரூட் கஸ்டர்டு இப்படி ஒரு முறை அவசியம் செய்து பாருங்கள்!
சூப்பர் சுவையில் ஃபுரூட் கஸ்டர்ட் செய்யலாம் வாங்க!
தேவையான பொருட்கள்
- பால்-2 லிட்டர்
- சர்க்கரை-5
- கஸ்டர்ட் பவுடர்-3 டீஸ்பூன்
- நறுக்கிய பழங்கள்-3 கப் (மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரிச்சம் பழம்,)
செய்முறை
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் கலக்காத கெட்டியான பாலை ஊற்றி சுட வைக்கவும்.
- பால் சுடுவதற்குல் ஒரு கிண்ணத்தில்3 டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை போட்டுஅதில் பாலை சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
- பால் சிறிது சுட்டதும் அதில் கலந்து வைத்திருக்கும் இந்த கஸ்டர்டு பவுடரை கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- பின்பு பால் சிறிது கெட்டியாக மாறியதும் அதில் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும்.
- சர்க்கரை நன்கு கரைந்த பின் அடுப்பிலிருந்து பாலை இறக்கி நன்கு ஆற விடவும்.
- பால் நன்கு ஆறியவுடன் அதில் நறுக்கி வைத்திருக்கும் மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரிச்சம் பழம், ஒவ்வொன்றாகப் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்பு இந்த கலக்கிய ஃப்ரூட் கஸ்டர்டை அப்படியே எடுத்து ஃபிரிட்ஜில் 1/2 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை வைக்கவும்.
- இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்து ஒரு கிண்ணத்தில் இதை ஊத்தி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை அதன் மேலே தூவி பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சுவையான, சத்தான மற்றும் சில்லென்ற ப்ரூட் கஸ்டட்தயார்.
0 Comments