நேந்திர வாழைப்பழம் பஜ்ஜி செய்வது எப்படி?
நேந்திர வாழைப்பழம் பஜ்ஜி செய்வது எப்படி ?
தேவையான பொருட்டுகள்
- நேந்திர வாழைப்பழம்-3
- மைதா மாவு- 1/2 கப்
- மஞ்சள் பொடி-1/4 ஸ்பூன்
- சர்க்கரை-1/4 கப்
- உப்பு- தேவையான அளவு
- சோடா உப்பு-தேவையான அளவு
செய்முறை
- நேந்திரம் பழத்தை தோல் நீக்கி நீளமாக சிறிது கனத்தில் வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, சர்க்கரை,சமையல் சோடா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் நேந்திரம் பழத்தை மாவில் போட்டு எணணெய் போடவும்
- பிறகு நன்கு இரு புறமும் பொன்னிறமாக மாறியதும் எடுத்து தட்டில் சூடாகபரிமாறவும்
0 Comments