Main Menu

கோதுமை மாவில் குலாப் ஜாமுனா ? அடடா என்ன ருசி

கோதுமை மாவில் குலாப் ஜாமுனா ? அடடா என்ன ருசி! 

வீட்டிலே எளிமையாக சுவையாக கோதுமை மாவில் குலாப் ஜாமுன் உங்களுக்காக!!!

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் குலாப் ஜாமுன் கரைந்து போகாமல் கடையில் விற்கும் அதே சுவையில்!

 உங்களுக்காக காத்திருக்கிறது! வாருங்கள் செய்யலாம்.



          தேவையான பொருள்கள்



  • கோதுமை மாவு 1 கப் 
  • மில்க் பவுடர் 1/4 கப் 
  • பால் 1/2 கப் 
  • நெய் 1/4 கப் 
  • உப்பு 1 ஸ்பூன் 
  • சர்க்கரை 3/4 கப் 
  • ஏலக்காய் 4
  • எண்ணெய் 1/2 லிட்டர் 

                            செய்முறை 



  • முதலில் 1 கப் கோதுமை மாவை எடுத்து அதில் 1/4 கப் மில்க் பவுடர் சேர்த்து உப்பு சிறிதளவு சேர்த்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு பிசைய வேண்டும். 
  • அதில் நெய் ஊற்றியும் பிசையவேண்டும். 

  • சப்பாத்தி மாவு பதத்திற்கு அல்லது உருண்டையாக போடும் அளவிற்கு நன்கு பிசைய வேண்டும். 
  • நன்கு பிசைந்த பிறகு 10 நிமிடம் அப்படியே விட வேண்டும். 
  • பின்பு மற்றோரு பாத்திரத்தில் 3/4 கப் சர்க்கரை  அதற்கு 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 
  • பாகு பதத்திற்கு வந்தவுடன் அதில் 4 ஏலக்காய் கசக்கி போடவும். 

  • பின்பு பிசைந்த மாவை எடுத்து சிறிய உருண்டையாக போட்டு வைத்த கொள்ளவும்.
  •  பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன் போட்டு வைத்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை நன்கு பொறிக்க வேண்டும்.

  •  பின்பு பொறித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் போடவும். 
  • சிறிது நேரம் பாகில் ஊறிய பிறகு அலங்காரத்திற்கு பிஸ்தா முந்திரி தூவி கொள்ளலாம். 



இதோ சுவையான இனிப்பான குலாப் ஜாமுன் தயார்! 

இந்த மாறி செஞ்சு குழந்தைங்க கிட்ட போய் குடுங்க விரும்பி சாப்புடுவாங்க

Post a Comment

0 Comments