Main Menu

கறி சுவையில் பலாக்காய் குருமா செய்வது எப்படி?

கறி சுவையில் பலாக்காய் குருமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  •  பலாக்காய் – சிறியளவு
  • வெங்காயம் – 2 
  • தக்காளி – 2
  • பச்சை மிளகாய் – 2
  • பட்டை-2
  • ஏலக்காய்-2
  • கிராம்பு – 2
  • தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன
  • மஞ்சள்தூள் – 3/4 டீஸ்பூன் 
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் 
  • உப்பு – தேவையான அளவு
  • தயிர் – 2 டேபிள் ஸ்பூன், 
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், 
  • நெய் – 4 டீஸ்பூன் 
  • மல்லித்தழை- சிறிதளவு
  • புதினா இலை – சிறிதளவு 
  • தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன் 
  • முந்திரிப்பருப்பு – 5

செய்முறை 

  • முதலில் பலாக்காயை தோல் நீங்கி சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அடுப்பில் வைத்து  குக்கரை வைத்து,  தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
  • நெய் சூடாகியதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். 
  • பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • அதனுடன் இஞ்சி, பூண்டுபேஸ்ட் , நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலைகள், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்க  வேண்டும்  மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் உள்ளிட்ட  மசாலா வகைகளையும் சேர்த்து வதக்க வேண்டும். 
  • பின்பு தேவையான அளவிற்கு தயிர் மற்றும் உப்பு சேர்த்து குறைந்த தீயில் நன்கு வேக விட வேண்டும்.
  • பின்பு காய்கறிகள் அனைத்தும் வெந்து வந்ததும் தேங்காய் மற்றும் முந்திரி பருப்புகளை சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு அதனை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். மசாலா வாசம் போக, காய்கறிகள் வெந்து கிரேவி பதம் வந்ததும் இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான பலாக்காய் குருமா தயார்

    .

Post a Comment

0 Comments