Main Menu

யம்மி... சீஸ் பாஸ்தா! பசங்களா ரெடியா?

யம்மி... சீஸ் பாஸ்தா! பசங்களா ரெடியா?

தேவையான பொருட்கள்:


பாஸ்தா -தேவையான அளவு 

தக்காளி-4 (பொடியாக நறுக்கியது)

 காய்ந்த மிளகாய்4 

 பூண்டு-10  (பொடியாக நறுக்கியது) 

 பால்-1/2 கப்  

 சர்க்கரை-1ஸ்பூன் 

 சீஸ்-1/2 கப் (துருவியது) 

கொத்தமல்லி-ஒரு கைப்புடி 

ஆலிவ் ஆயில் -1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை:


  • முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி அதனை  நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பின், தண்ணீரில் பாஸ்தா மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்ட வேண்டும்.
  • பின்பு மிக்சி ஜாரில் நறுக்கிய தக்காளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு  அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் ஒரு Pan வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , பூண்டு,  சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின் அரைத்த தக்காளி விழுதை ஊற்றி,சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதனை நன்றாக வேக விட  வேண்டும் 
  • பின்பு அதில் சிறிது பால் சேர்த்து கிளறி விட்டு , வேக வைத்து எடுத்துள்ள பாஸ்தாவை உடனே சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.  இறுதியில் துருவிய சீஸ் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கொஞ்சம் நேரம் விட்டு இறக்கி சூடாக பரிமாறினால், சுவையான சீஸ் பாஸ்தா தயார்! 

Post a Comment

0 Comments