குழந்தைகளின் உள்ளங்களை கொள்ளை அடிக்கும் ஜில் ஜில் கூல் கூல் குல்பி ஐஸ் செய்யலாம் வாங்க
தேவையான பொருட்டுகள்
சர்க்கரைப் பொடி – 200 கிராம்
கார்ன்ப்ளேவர் – 1 கரண்டி
ஜெலட்டின் – 2 கரண்டி
ரோஸ் எசன்ஸ் – 1 கரண்டி
முந்திரி – 20கிராம்
பாதாம் – 20கிராம்
பிஸ்தா– 20கிராம்
செய்முறை :
முதலில் 3 லிட்டர் பாலை நன்கு காய்ச்சி 1 லிட்டர் பாலாக காய்ச்சி எடுக்க வேண்டும்.
பால் வற்றி வரும் போது சர்க்கரைப் பொடி போட வேண்டும். பின் அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேர் மாவை பாலில் கரைத்துநன்கு கெட்டியானதும் இறக்கவும்.
பாதாம், பிஸ்தா, முந்திரியை தண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இப்பொது அரைத்தைய் அதில் மிக்ஸ் செய்யவும் பின்பு
பின்பு குல்பி மோல்டில் அல்லது சிறிய டம்ளரில் அக்கலவையை சேர்த்து ஒரு ஐஸ்க்ரீம் குச்சியை அதனுடன் குத்தி பிளாஸ்டிக் கவர் அல்லது அலுமினிய ஃபாயில் சேர்த்து நன்றாக கட்டி வைக்கவும்.
ஃப்ரீஸரில் 5 மணி நேரம் வைத்து வெளியே எடுத்தால் சுவையான குல்பி தயார்.
கட்டி வைத்த ஐஸ்க்ரீம் கலவையை ஃப்ரீஸரில் 5 மணி நேரம் வைத்து வெளியே எடுத்து சிறிதளவு டம்ளரை தண்ணீரில் முக்கி குச்சியை பிடித்து வெளியே இழுத்தால் சுவையான குல்பி தயார்.
குழந்தைகளின் உள்ளங்களை கொள்ளை அடிக்கும் ஜில் ஜில் கூல் கூல் குல்பி ஐஸ் செய்யலாம் வாங்க
0 Comments