Main Menu

விட்டமின் சி உறுதி கொண்ட டேஸ்டியான நெல்லிக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க!

விட்டமின் சி உறுதி கொண்ட டேஸ்டியான நெல்லிக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க!

தேவையான பொருட்கள்

  •      சமைத்த அரிசி 1 கப்
  •      நெல்லிக்காய் -6
  •      தேங்காய்- 1/4 கப்
  •      பச்சை மிளகாய்- 4
  •      வேர்க்கடலை -4 டீஸ்பூன்
  •      எண்ணெய் -3 டீஸ்பூன்
  •      கடுகு- 1/4 டீஸ்பூன்
  •      கடலை பருப்பு- 1/4 டீஸ்பூன்
  •      உளுத்தம் பருப்பு- 2டீஸ்பூன்
  •     கறிவேப்பிலை- ஒரு கைப்புடி 
  •     உப்பு-தேவையான அளவு 

செய்முறை 

  • சமைத்த அரிசியை எடுத்து அகலமான தட்டில் பரப்பவும். 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மென்மையான கலவையை கொடுக்கவும். அதை ஒதுக்கி வைக்கவும்.
  •  முதலில் நெல்லிக்காயை கழுவி துருவி தனியாக வைக்கவும்
  • பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும்.  பின்பு கடுகு,உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை போடவும் . பின்பு பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  • பின்பு  பாத்திரத்தில் துருவிய நெல்லிக்காயை சேர்க்கவும். மேலும் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். நெல்லிக்காயை குறைந்தது 5 நிமிடம் வேக வைக்கவும்.  
  • அதனுடன்  சாதத்தை  சேர்க்கவும். சாதம் உடையாமல் அனைத்தையும் மெதுவாக கலக்கவும். 
  • ஆரோக்கியமான மற்றும் சுவையான நெல்லிக்காய் சாதத்தைஅனைவருக்கும் பரிமாறவும் 


     

Post a Comment

0 Comments