இறால் தொக்கு இப்படி ஒரு முறை ருசியா செஞ்சு அசத்துங்க ! இறால் தொக்கு இப்படி ஒரு முறை ருசியா செஞ்சு அசத்துங்க !
தேவையான பொருட்கள்
இறால் -அரை கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கைப்புடி
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கரம் மசாலாத்தூள் -1 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீ ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், சோம்பு சேர்க்கவும். பின்பு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு இஞ்சி-பூண்டு பேஸ்ட் , பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரைவறுக்கவும் . கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் .பின்பு தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கி, அதனுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். சிறிது நேரத்தில் இறால் வெந்ததும் கரம் மசாலாத்தூள் மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறவும்
0 Comments