Main Menu

வீடே மணக்கும் நாட்டு கோழி குழம்பு ஒரு தட்டு சோறு

 வீடே மணக்கும் நாட்டு கோழி குழம்பு 
ஒரு தட்டு சோறு

தேவையான  பொருட்கள்

  1. நாட்டுக்கோழி- 1  கிலோ
  2. வெங்காயம் – 4
  3. தக்காளி – 3
  4. சீரகம்- ½  ஸ்பூன்
  5. தேங்காய் – 2 ஸ்பூன்
  6. பூண்டு – 6 பல்
  7. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  8. இஞ்சி, பூண்டு பேஸ்ட் –2  ஸ்பூன்
  9. தயிர் – 2  ஸ்பூன்
  10. பச்சை மிளகாய்- 4
  11. மல்லி (தனியா) – 2  ஸ்பூன்
  12. மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
  13. கரம் மசாலா – ½ டீஸ்பூன்
  14. உப்பு – தேவையாள அளவு
  15. எண்ணெய் – 3 ஸ்பூன்
  16. கொத்தமல்லி – ஒரு கைப்புடி 
  17. தண்ணீர் – சிறிதளவு

செய்முறை 

  • முதலில் மல்லி, சீரகம், தேங்காய் மற்றும் பூண்டு ஆகியவற்றை கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும் வருத்தது ஆறிய  பிறகு மிக்சியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை  போட்டு  நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • பின்பு அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு10 நிமிடம் நன்கு வதக்கவும்.
  • அதன் பிறகு தக்காளியை போட்டு வதக்கவும்.
  • தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த பேஸ்ட், கரம் மசாலா, உப்பு மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து10நிமிடம் நன்றாக வதக்கவும்.
  • அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டு  கோழி சிக்கன் துண்டுகளை மசாலாவில் படும் வரை நன்றாக பிரட்டி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து30 நிமிடம் வரை சிக்கனை வேகவைக்க வேண்டும்.
  • சிக்கன் நன்றாக வெந்ததும் இறக்கி குழம்பின்மேல் கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி

Post a Comment

0 Comments