குளுகுளு இளநீர் பாயசம்!!!!!!!!!! குளிர்ச்சி தரும் இளநீரில் பாயசம் செய்யலாம் வாங்க
தேவையான பொருட்கள்
தேங்காய் கூழ்-3/4 (மென்மையானது )
தேங்காய் தண்ணீர்- 2 லிட்டர்
பால்- ஒரு கப்
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
முந்திரி பருப்புகள்-4
நெய்-1/4
செய்முறை
முதலில் சிறிது இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் ஒரு பல்ஸ் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்
பின்பு ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும் .
பின்பு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த் தூள் ஆகியன சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும் பிறகு தேங்காய் பால் சேர்த்து கலந்து இறக்கவும். இப்போது இளநீர் பாயாசம் ரெடி.
இளநீர் பாயாசத்தின் மீது இளநீர் மென்மையான துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம்.
அது இன்னும் சுவையைக் கூட்டும்! இன்னும் ஆரோக்கியமானது !!!!
0 Comments