தோசை, இட்லிக்கு இனிமே இந்த மாறி தக்காளி சட்னி செஞ்சு பாருங்க! அடடா என்ன ருசி!!!
தோசை, இட்லிக்கு இனிமே இந்த மாறி தக்காளி சட்னி செஞ்சு பாருங்க!!!
அப்பறோம் வீட்டில் தோசை இருக்காது அந்த அளவுக்கு சுவை!!!
சாதத்திற்கு கூட இந்த சட்டியை வச்சு சாப்பிடலாம் குறைந்த செலவு மிகுந்த பலன்!!!
தேவையான பொருள்கள்
1. தக்காளி 2
2. பெரிய வெங்காயம் 2
3. இஞ்சி சிறிதளவு
4. பூண்டு சிறிதளவு
5. கடுகு சிறிதளவு
6. கடலை பருப்பு சிறிதளவு
7. உளுந்தம்பருப்பு சிறிதளவு
8. சீரகம் சிறிதளவு
9. கொத்தமல்லி சிறிதளவு
10. புதினா சிறிதளவு
11. நல்லெண்ணெய் தேவையான அளவு
12. காய்ந்த மிளகாய் காரத்திற்கு ஏற்ப
13. மஞ்சள் தூள் சிறிதளவு
14. கருவேப்பிலை சிறிதளவு
15. உப்பு தேவையான அளவு
செய்முறை
1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு,உளுந்தம்பருப்பு, சீரகம் சிறிதளவு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
2. பின்பு காய்ந்த மிளகாய்,இஞ்சி,பூண்டு ,நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
3. அதில் சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு சிறிதளவு புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
4. வதக்கிய பிறகு மஞ்சள் தூள் சிறிதளவு, புதினா கொத்தமல்லி அனைத்தயும் சேர்த்து வதக்கவும்.
5. நன்கு வதக்கிய பிறகு எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் அடுப்பை அனைத்து விடவும்.
6. நன்கு ஆற விடவும். ஆறிய பிறகு மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.
7. அரைத்த கலவையை தனியாக எடுத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சிறிதளவு சேர்த்து பொறிக்கவிடவும்.
8. பின்பு கருவேப்பிலை சேர்த்து கிண்டவும். இதில் அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
இதோ ஈஸியான அருமையானb தக்காளி சட்னி தயார்
0 Comments