மணமணக்கும்... செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி செய்யலாம் வாங்க
தேவையான பொருட்கள்
முட்டை -8
வெங்காயம் - 2
எண்ணெய் - 5 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
கொத்தமல்லி - கைப்பிடி அளவு
தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 20 பல்
இஞ்சி - 1/2 துண்டு
தேங்காய் -தேவையான அளவு
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
ஏலக்காய் -3
கிராம்பு -2
பட்டை - 1/2 துண்டு
முந்திரி - 4
கொத்தமல்லி - ஒரு கைப்புடி
செய்முறை :
முதலில் முட்டைகளை வேக வைத்து எடுத்துகொள்ளவும்
பின்பு அரைக்க வேண்டிய பொருட்கலை அரைத்து எடுத்து கொள்ளவும்
பின்பு ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி பிரிஞ்சு இலை , சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். இவற்றுடன்மசாலா வகைகளை சேர்த்துகொள்ளவும் பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து கெட்டிப்பதம் வரும் வேளையில் வேக வைத்த முட்டையில் கீரல் போட்டு குழம்பில் போடவும். அதோடு கொத்தமல்லி தழை தூவவும்.
நன்கு கிளறி சிறு தீயில் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவுதான் செட்டிநாடு சுவையில் முட்டை கிரேவி தயார்.
0 Comments